• Nov 05 2024

பிக் பாஸில் மீண்டும் நுழைந்த சச்சனாவின் அதிரடி ஆட்டம்? மூன்று பேருக்கு வைத்த செக்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்தாவது நாளை கடக்கின்றது. இந்த முறை இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.

இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, ஆர்ஜே அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.


இந்த நிலையில், தற்போது ஐந்தாவது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக முதல் நாளே எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்த சச்சனா உள்ளே வந்துள்ளார். இதை பார்த்து விஜய் விஷால் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்.

மேலும் தான் வெளியே இருந்து பார்த்தவரை குறைவாக கண்டென்ட் கொடுப்பது ரஞ்சித் - சத்யா - விஜே விஷால் தான். இவர்கள் தான் குறைவான கண்டென்ட் கொடுப்பது என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு வந்ததுமே மூவருக்கும் செக் வைத்துள்ளார் சச்சனா.

Advertisement

Advertisement