• Aug 04 2025

'சரிகமப' மேடையில் ஒலித்த சபேசனின் 'ஆராரிராரோ..' பாடல்..! நேரில் வந்த அம்மா..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி வாராவாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5இல் இந்தவாரம்  Dedication Round ஸ்பெஷல் வாரமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் சரிகமப மேடையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் Dedication Round இல் தமது தெரிவு பாடல்களை பாடியுள்ளனர்.


அந்தவகையில் இம்முறை இலங்கை அம்பாறையில் இருந்து  சரிகமப நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சபேசன் , Dedication Round இல் தன்னுடைய அம்மாவுக்காக "ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து..." என்ற பாடலை அனைவரும் பிரமித்து பார்க்கும் படி பாடி அசத்தியுள்ளார். 


தன்னுடைய தாயை நினைத்து உருகி சபேசன் பாடிய பாடலை கேட்டு சக போட்டியாளர்கள் பார்வையாளர்கள், என அனைவரும்  கண்ணீர் சிந்தியதுடன், சபேசன் பாடல் பாடிக்கொண்டிருக்கும் போது சப்ரைஸாக சபேசனின் அம்மாவை சரிகமப அரங்கினுள் அழைத்து நடுவர்களுடன் அமர்ந்து மகனின் பாடலை கேட்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சபேசனின் பாடல் நிறைவுற்றதும் தொகுப்பாளினி அர்ச்சனா, 'அம்மா என்று சத்தமாக கூப்பிடுமாறு சபேசனிடம் கூற' சபேசனும் அம்மா என அழைத்தபோது அங்கு அவரது தாய் எழுந்து வந்து சரிகமப மேடைக்கு சென்று சபேசனை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


அதேவேளை, சபேசனின் தந்தையும் மேடைக்கு அழைக்கப்பட்டதுடன் சபேசனை பாராட்டினார்.


இதனையடுத்து நடுவர்கள்  Dedication Round இல் இது சபேசனின் கோல்டன் சிதறல் பெர்போமன்ஸ் என்று அறிவித்தனர்.


இந்நிலையில் 'சரிகமப' மேடையில் ஒலித்த சபேசனின் ஆராாிராரோ... பாடலுக்கு கோல்டன் சிதறல் பெர்போமன்ஸ் கிடைத்தமைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement