• Jan 19 2025

தவிடுபொடியான அரசியற்களம்.. மீண்டும் சினிமாவில் சரணடையும் ரோஜா? ஆனாலும் சிக்கல்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாகவும் பலரின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா.

செம்பருத்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து ரஜினி, சத்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, பிரபுதேவா உட்பட பல தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து பிரபல இயக்குனரான செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ரோஜா, அரசியலில் முழு ஈடுபாடு காட்டினார். ஆனால் இந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோல்வியை தழுவி கொண்டார்.


இந்த நிலையில், தேர்தலில் தோல்வியடைந்த ரோஜாவின் அடுத்த கட்டப்படி என்ன? கட்சிப் பணியில் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் திரைப்படங்களிலும் டிவி சேனல்களிலும் நடிப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அவருக்கு தமிழ் திரை உலகிலும் வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. ஆனால் ரோஜாவின் முடிவு என்ன? அவர் படங்களில் நடிப்பாரா அல்லது கட்சி  நிகழ்வுகளில் தான் தொடர்ந்து செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Advertisement

Advertisement