• Oct 31 2024

ரொமான்ஸ் பண்றதெல்லாம் ஈசி இல்லை, அந்த நிலமை மாறனும்- முத்தக் காட்சி குறித்து ஓபனாகப் பேசிய அஞ்சலி

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் அஞ்சலி. கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட் படங்களில் நடித்த இவர் தமிழில் சரியான படவாய்ப்பு அமையாததால் தெலுங்கு சினனிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.அதன்பின் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் ஜெய்யுக்கு இருந்த மதுப்பழக்கத்தின் காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர்.இதனை அடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்று அளித்த அஞ்சலி, நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும். உடன் நடிக்கக்கூடிய நடிகர் தன்னை பற்றி என்ன நினைப்பார்? ஏதாவது தவறாக நினைத்து விடுவாரா? என்றெல்லாம் மனம் நினைக்கும். இது நடிகைக்கு மட்டுமில்லை நடிகர்களுக்கு தோன்றும். 

காதலன் காதலி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்றால் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல், அது வேறு விஷயம்.அப்படி இருக்கும் பொழுது அவர்களுடன் இப்படியான ரொமான்ஸ் காட்சிகள் முத்த காட்சிகள் நடிக்கும் போது ஒருவித நெருடலாகவே இதுதான் உண்மை. ஆனால், படம் பார்ப்பவர்களோ, ரசிகர்கள் மத்தியில் ரொமான்ஸ் காட்சி என்றாலே நடிகைகள் நடிகர்கள் ஜாலியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். முதலில் இந்த நிலைமாறவேண்டும் என்று  அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Advertisement