• Jan 18 2025

குடும்ப வறுமை காரணமாக படிப்பை இடைநிறுத்திய ரோஜா சீரியல் ப்ரியங்கா- சினிமாவில் நுழைந்தது எப்படி?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ப்ரியங்கா நல்காரி. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று நல்லதொரு அடையாளம் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இவர் தெலுங்கு சினிமாவில் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தனது 16 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த இவர் அந்தரே பந்துவாலா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இது தவிர தமிழிலும் சில சில கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.


அதன்படி காஞ்சனா 3 சம்திங் சம்திங் போன்ற பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.நன்றாகப் படிக்கக் கூடிய இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டு பிரபல சேனல் ஒன்றில் விஜேவாக அறிமுகமாகினார்.அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் 10 வரை படித்தார்.

பின்னர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து மீண்டும் தனது படிப்பை மேற்கொண்டாராம்.இவருகக நடிப்பதைப் போல நடனம் ஆடுவதும் ரொம்பவும் பிடிக்குமாம்.இவருடைய நடனத்தின் மூலம் தான் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 படத்தில் நடிக்க  வாய்ப்புக் கிடைத்ததாம். இதனை அடுத்து தான் ரோஜா சீரியலில் கமிட்டாகி நடித்தார்.


இந்த சீரியல் சுமார் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் முடிவடைந்ததை அடுத்து என்ன சீரியலில் நடிக்கப் போகின்றார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ரசிகர்களின் ஆசைக்கிணங்க தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement