சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதி கோபத்தில் தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அவளை சமாதானப்படுத்த ரவி மற்றும் மீனா சென்றாலும், நீத்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் வீட்டுக்கு வருவேன் என ஸ்ருதி கூறுகின்றார்.
இதை தொடர்ந்து நான் இனி வேலைக்கு வர மாட்டேன் என்று நீத்துவுக்கு கால் பண்ணி சொல்லுமாறு முத்து ரவிக்கு சொல்லுகின்றார்.
அதன்படி ரவியும் நீத்துவுக்கு கால் பண்ணி, நான் இனி வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்ல, அது எனக்கு தெரியும். அதனால் நான் வேறு ஒரு செஃபை வேலைக்கு எடுத்துட்டேன் என்று கூறுகின்றார்.
மேலும் ஸ்ருதியிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும் என ரவி சொல்ல, அதெல்லாம் முடியாது. நான் இப்பவும் உன்னை தான் காதலிக்கின்றேன் என்று நீத்து சொல்லுகின்றார் .

இதைக் கேட்டு கடுப்பான ரவி போனை கட் பண்ணுகின்றார். எனினும் மனோஜ், நீ பேசாமல் நீத்துவின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டு அவளிடம் பேசி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வைத்து, இரண்டு பேரையும் மேனேஜ் பண்ணு என்று முட்டாள்தனமான ஐடியா ஒன்றை கொடுக்கின்றார்.
அதன்பின் விஜயா ஸ்ருதியுடன் பேசி அவரை வீட்டுக்கு வர வைக்கின்றேன் என்று பில்டப் கொடுக்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு விஜயா கால் பண்ண, நீங்க யாரு எனக் கேட்டு பல்பு கொடுக்கின்றார் ஸ்ருதி.
மறுபுறம், ரோகிணி மனோஜிடமிருந்து நழுவிப்போன ஆர்டரை மீண்டும் கைப்பற்ற களமிறங்கி, கம்பெனி மேனேஜரை சந்திக்கிறார்.
மேலும், நீங்கள் அந்த ஆர்டரை கேன்சல் செய்ததால் என்னை வீட்டை விட்டே துரத்தி, விவாகரத்து செய்யப் போகிறார்கள் என பொய் கூறுகிறார். மேனேஜரும் ரோகிணியின் நாடகத்தை நம்பி, சரி.. நான் பார்க்கிறேன்.. என கூறுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது. அடுத்த எபிசோட்டில் ரோகிணியின் புதிய திட்டம் வெற்றி பெறுமா? மீண்டும் மனோஜுடன் இணைவாரா என பொறுத்து இருந்து பார்ப்போம்.
Listen News!