• Jan 09 2025

விஜயா வீட்டில் சரிந்தது ரோகிணியின் சாம்ராஜ்ஜியம்.! மனோஜுக்கு தெரியவந்த சீக்ரெட்

Aathira / 17 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ்  ஏமார்ந்த பணத்தை மீட்பதற்காக முத்துவும் மீனாவும் அலைந்து திரிவதாக சொல்லுகின்றார்கள். மேலும் மனோஜை  ஏமாற்றியவர்கள் கிடைத்தாலும் பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்று மீனா சொல்ல, அதுவும் சரிதான் பணத்தை எடுத்தவர்கள் இந்நேரம் செலவு செய்திருந்தால் பணம் மீண்டும் கிடைப்பது கஷ்டம் என்று முத்து சொல்கின்றார்.

அதன் பின்பு விஜயா சாப்பாடு செய்ய சொல்ல, மீனாவும் முத்துவும் வெளியில் சாப்பிட்டுவிட்டு அண்ணாமலைக்கும் விஜயாவுக்கும் வாங்கி வந்ததாக சொல்கின்றார். ஆனாலும் விஜயா தனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்து வராது வீட்டில் செய்து தருமாறு சொல்லுகின்றார்.

அதன் போது ரோகிணியை சாப்பாடு செய்ய சொல்லுகின்றார் முத்து. இதனால் தோசை சுட தெரியாமல் தோசை சுட்டு கொடுக்கின்றார் ரோகிணி. அந்த நேரத்தில் ஸ்ருதியும் தனக்கு டீ போட்டு தருமாறு சொல்லுகின்றார். இறுதியில் ரோகினி சுட்டுக் கொடுத்த தோசையை விஜயாவும் மனோஜூம் சாப்பிடவில்லை.


ரோகினி, ஸ்ருதி மற்றும் மீனா ஆகியோர் கிச்சனில் இருக்கும்போது ரோகிணியிடம் மீனா நீங்க ஏன் சிட்டி கிட்ட பணம் வாங்கினீங்க? என்று கேட்க, இதைக் கேட்டதும் ரோகிணிக்கு உடம்பெல்லாம் வேர்த்து விட்டது. ஸ்ருதியும் கடன் வாங்கி  மாட்டிக்கொள்ளாதீங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ண, உங்க ரெண்டு பேரின் அட்வைஸுக்கும் நன்றி என சொல்லிவிட்டு செல்லுகின்றார் ரோகிணி.

இறுதியில் முத்து ரோகினி சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தை ரவியிடம் சொல்லிக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில் மனோஜூம் வர, ரோகிணி உண்மையாகவே பணக்கார வீட்டு பெண் தானா? எதற்கும் விசாரி ரவுடியிடம் பணம் வாங்கி உள்ளார் என்று சொல்லுகின்றார் முத்து. இதை கேட்ட மனோஜ் நேரடியாக ரோகிணியிடம் சென்று முத்து சொன்னவற்றை கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement