பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனி உடன் அடுத்த முறை செக்கப்புக்கு தான் வருவதாக பாக்யா சொல்லுகின்றார். இதன்போது அங்கு வந்த ஈஸ்வரி கோபியை ஹாஸ்பிடல் கூட்டி செல்ல வேண்டும் என்று செழியனை அழைக்கின்றார். ஆனாலும் அவர் தனக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருப்பதாக சொல்லுகின்றார்.
அந்த நேரத்தில் ராதிகாவும் கோபியும் கீழே வந்து தாங்கள் ஹாஸ்பிடல் செக்கப்புக்கு தான் போவதாக சொல்ல, கோபியை தன்னுடன் வருமாறு ஈஸ்வரி அழைக்கின்றார். இதனால் ராதிகாவுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தொடர்கின்றது.
இறுதியில் மூன்று பேரும் போகலாம் என்று மூன்று பேரும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றார்கள். அங்கு சென்றதும் டாக்டரை பார்க்க கோபியுடன் ஒருவர் தான் போக வேண்டும் என்று சொல்ல, அதில் வைத்தும் வாக்குவாதம் நடக்கின்றது. இதனால் கோபியை இழுத்துக்கொண்டு ராதிகா உள்ளே சென்று விடுகின்றார்.
அங்கு கோபிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அவர் நார்மல் ஆகத்தான் இருக்கின்றார் என்று டாக்டர் சொல்கின்றார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி, ராதிகா தனது உரிமையை பறிப்பதாக அழுது புலம்புகின்றார். அதற்கு பாக்கியா ராதிகா உங்க பையன நல்லா தான் பார்த்துக் கொள்வார்கள்.. நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லுகின்றார்.
அதன் பின்பு அங்கு வந்த கோபியும் ஈஸ்வரியை சமாதானம் செய்துவிட்டு டாக்டர் எனக்கு ட்ரஸ் வரக்கூடாது என்று சொல்லி இருக்கின்றார். நீங்களும் ராதிகாவும் சண்டை போடும்போது எனக்கு அப்படித்தான் நடக்கிறது என்று ஒரு குண்டை தூக்கி போடுகின்றார்.
இதனால் தான் இனி எதிலயும் தலையிட மாட்டேன் எனக்கு உனது உடல்நிலை தான் முக்கியம் என்று ஈஸ்வரி சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!