சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனாவோட அம்மான்ர பூ கடையை எப்புடியாவது காலி பண்ணனும் என்று ரோகிணி சிந்தாமணிட்ட பிளான் கேட்க்கிறார். அதைக் கேட்ட சிந்தாமணி ஷாக் ஆகுறார். பின் ரோகிணியை பார்த்து உனக்கும் மீனாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க்கிறார். அதுக்கு ரோகிணி மீனா என்ட வாழ்க்கையில நிறைய பிரச்சனை பண்ணிட்டாங்க அதுதான் அப்புடி சொன்னான் என்கிறார்.
பின் இதையெல்லாம் கேட்ட சிந்தாமணி எனக்கு இதை செய்யுறதுக்கு சம்மதம் என்கிறார். இதனை அடுத்து சத்யா தனக்கு வேலை கிடைச்சிட்டு நானும் நல்ல மாதிரித் தான் சம்பாதிக்கிறேன் நீ வேலை செய்யாமல் வீட்ட இருக்கலாம் தானே என்று அம்மாவைப் பார்த்துச் சொல்லுறார். அதே இடத்துக்கு மீனாவும் வந்து நம்ம பூக்கடைக்கு name board வைக்கணும் என்கிறார்.
இதனை அடுத்து 5 அதிகாரிகள் வந்து பூ கடையை காலி பண்ணனும் என்று சொல்லுறார்கள். அதைக் கேட்ட முத்து யார் உங்கள கடையெல்லாம் காலி பண்ண சொன்னது என்று கோபமாக கேட்க்கிறார். அதுக்கு வந்த அதிகாரிகள் கோவில் நிர்வாகம் தான் கடையை காலி பண்ண சொன்னாங்க என்கிறார்கள். பின் அவங்க எல்லாரும் கடையை காலி பண்ணுறதை பார்த்த மீனாவோட அம்மா கதறி அழுகிறார்.
அதைத் தொடர்ந்து சீதா அருண் கிட்ட அம்மாவோட பூ கடையை காலி பண்ணிட்டாங்க என்று சொல்லுறார்.அதைக் கேட்ட அருண் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல நான் பார்த்துக் கொள்ளுறேன் என்கிறார். பின் முத்து இதுக்கெல்லாம் காரணம் சிந்தாமணி தான் என்பதைக் கண்டு பிடிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!