• Oct 02 2025

விண்வெளியில் திருமணமா.? டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடிகளின் அதிரடி முடிவு.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் உலகத்தில் எப்போதும் புது செய்திகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், இந்த முறை ஒரு கட்டுக்கதை போல் தோன்றும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாம் க்ரூஸ் மற்றும் அனா டி அர்மாஸ் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள், அதுவும் விண்வெளியில் வானிலிருந்து ஸ்கைடைவிங் செய்தபடி!


இந்த தகவல்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்களும், ஊடகங்களும், இது உண்மையா? என்று வியப்புடன் கவனித்து வருகின்றனர்.

பல ஹாலிவுட் நபர்களைப் போல, டாம் க்ரூஸும் தனது வாழ்க்கையை துவங்குவதில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், சமீபத்திய ஒரு தகவலின் படி, டாம் மற்றும் அனா, திருமணத்தை அனைவருக்கும் நினைவில் நிற்கும் வகையில் செய்ய விரும்புகிறார்கள். வழக்கமான திருமணமாக இல்லாமல், வானில் ஸ்கைடைவிங் செய்தபடி செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதே போலவே, மற்றொரு தகவலில், அவர்கள் விண்வெளியில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது முடிவாகும் வரை, அவர்களது காதலின் “உயரம் விண்வெளியை எட்டப்போகிறது போல என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement