• Apr 24 2026

சிங்கப் பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்த ரோபோ சங்கர்.! நெகிழ்ந்த ரசிகர்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த மறைந்த நடிகர் ரோபோ சங்கர், தனது பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு மறைந்தார். அவர் உயிருடன் இருந்த காலத்தில் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்த தருணங்கள் இன்னும் ரசிகர்களின் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளன. 

இந்த நிலையில், மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் பேரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரும் அவருடைய பேரனும் இருக்கும் வீடியோவை அவருடைய மகள் இந்திரஜிதா பகிர்ந்து உள்ளார். தற்போது அவருடைய வீடியோ மீண்டும் வெளியாகி, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் உயிரோடு இருக்கும் போது 'என் பேரன் நல்ல உடல்நலத்துடன், நல்ல மனிதராக வளர வேண்டும். அவனது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்ததாக இருக்கட்டும்' என்று அவர் கூறிய வார்த்தைகள், இன்று பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. 


குடும்பத்தை மிகவும் நேசிக்கும் மனிதராக இருந்த ரோபோ சங்கர், தனது பேரன் மீது வைத்திருந்த அன்பை இந்த வீடியோ  தெளிவாக காட்டுகிறது.

இந்த வாழ்த்து தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் நட்சத்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதோடு, ரோபோ சங்கர் தொடர்பிலும்  உணர்வுபூர்வமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதேவேளை, ரோபோ சங்கர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு அன்பான தந்தையாகவும் தாத்தாவாகவும்  அனைவரின் மனதிலும் என்றும் உயிருடன் இருப்பார் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement