சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, இன்றைய தமிழ் சினிமாவின் நிலவரம் குறித்து சில முக்கியமான மற்றும் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரிடையே பரவலான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சினிமா தயாரிப்பு குறித்து பேசுகையில், நடிகர் ஜீவா, “இப்போது 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தால், அதே அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது Memes Culture-ல் இருப்பதால் மொக்கை படம் எடுத்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்பு படத்தின் உள்ளடக்கம், நடிகர்கள், பாடல்கள் போன்றவை மட்டுமே படத்தை மக்களிடம் கொண்டு செல்ல போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடக விளம்பரங்கள், புரமோஷன் வீடியோக்கள், டிரெய்லர் லாஞ்ச் இவென்ட்கள், மீம்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மார்க்கெட்டிங்கில் முக்கிய பங்கு வகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜீவாவின் இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பலர் அவரது நேர்மையை பாராட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!