• Nov 04 2026

முத்து அடித்த அடியில் ஓட்டம் பிடித்த ஆர்.ஜே ஆனந்தி..! விழா கமிட்டிக்கு இதுதான் நல்லது

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரையில் மூன்று பேர் எலிமினேடாகி வெளியே சென்று உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இதன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றியதோடு இந்த முறை ஒரே வீட்டை இரண்டாக பிரித்து டாஸ்க்குகளை வைத்து வருகின்றார் பிக் பாஸ் தலைவர்.

அந்த வகையில் முதலாவது ஆகவே தயாரிப்பாளர் ரவிந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து எலிமினேட் ஆகி சென்றிருந்தார். அதன் பின்பு ஆர்னவ் எலிமினேட் ஆனார். இறுதியாக  கடந்த வாரம் தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.


இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட கேப்டன்சி டாஸ்கில் முத்துக்குமரன் வெற்றி பெறுகின்றார். அத்துடன் தற்போது முத்து, ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா ஆகிய 3 பேருமே தனித்தனியாக கண்டன்ட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதேவேளை, ஆர் ஜே ஆனந்திக்கு சமைப்பதில் ஒரு பிரச்சனை என்றதும் பிக் பாஸ் வீட்டில் உள்ள ரூல்ஸை  மாற்றுவதற்கு பார்க்கின்றார். மொத்தத்தில் இந்த விழா கமிட்டி ஆர்.ஜே ஆனந்தியை தள்ளி வைத்துவிட்டு கேம் விளையாடினார்கள் என்றால் ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் தமது கருத்தை முன்வைத்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement