தமிழ் திரையுலகில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் படங்களின் தரவரிசை தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்று, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய “ஜனநாயகன்”. இந்த படம் இன்று (ஜனவரி 9) ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) இன்னும் வழங்கப்படாததால் வெளியீட்டு தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னணி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சில நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் சம்பவம் தொடர்பாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபல சமூக வலைத்தள personality ப்ளூ சட்டை மாறன் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “இந்த பொங்கல் அண்ணன்-தம்பி பொங்கல் என பாசத்தை பொழிந்த திடீர் தளபதி பலத்த மௌனம். இதுதான் அண்ணன் மேல நீ வச்சிருக்கற அன்பா தம்பி? ஏதாச்சும் பேசு ராசா. பயப்படாத. நீதான் தைரியமான ஆளாச்சே..!” என சிவகார்த்திகேயனை வம்புக்கு இழுத்துள்ளார். தற்போது இந்த கருத்தை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் “பராசக்தி” படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம், படம் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!