• Apr 15 2026

பூஜையுடன் தொடங்கியது ரியோவின் ‘ராம் in லீலா’... வாழ்த்தினைத் தெரிவித்த பிரபல நடிகர்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘ராம் in லீலா’ திரைப்படத்தின் தொடக்க விழா தற்பொழுது நிகழ்ந்துள்ளது. இதில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். 


படத்தின் தொடக்க விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ராம் in லீலா’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் கண்ணன். இப்படத்தில் ரியோ மற்றும் வர்திகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், சினிமா வட்டாரத்திலும் அதிக கவனத்தை பெற்றதாகவும் நடைபெற்று உள்ளது.


சமூக வலைத்தளங்களில் வெளியான போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றன. இதில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர் குழுவினர் ஒன்றாக காணப்படுகின்றனர். மேலும், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு மனமார வாழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement