• Apr 16 2026

மனஅழுத்தத்திலிருந்து விடுபட… கெனிஷாவுடன் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, சமீபத்தில் தனது பெயரை அதிகாரபூர்வமாக ரவி மோகன் என மாற்றிக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பெயர் மாற்றத்தின் பின் இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான பேச்சுகளை உருவாக்கியிருந்தது. 


திரைப்பட உலகில் தன்னுடைய பயணத்தை தொடங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வரும் ரவி மோகன், ஆர்த்தியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே விவாகரத்துக்கு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. இந்நிலையில், ரவி மோகன் தனது புதிய தோழி கெனிஷாவுடன் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அத்துடன் இக்கோவிலுக்கு ரவி மோகன் மன நிம்மதிக்காகவே சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement