• Jul 27 2024

ஒரே படத்துல 2 நடிப்பு அரக்கன்களா? தாங்காது சாமி.. விக்ரம் பட வில்லன் பெயர் அறிவிப்பு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் 62வது படத்தில் வில்லனாக நடிப்பவர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து ஒரே படத்தில் 2 நடிப்பு அரக்கர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் அவரது வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் பெரிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து அவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் விக்ரம் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா தான் வில்லன் என சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த மாஸ் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விக்ரம் ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டால் அந்த கேரக்டராகவே முழுமையாக மாறி விடுவார் என்பதால் அவரை பல ஆண்டுகளாக நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமீபகாலமாக நடிப்பு அரக்கன் என எஸ் ஜே சூர்யாவையும் ரசிகர்கள் கூறி வருவதை அடுத்து, ஒரே படத்தில் இரண்டு நடிப்பு அரக்கர்களா? தாங்காது சாமி என ரசிகர்கள் காமெடியாக கூறி வருகின்றனர். எனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என திரை உலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில  தினங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement