• Jan 18 2025

ஏர்போர்ட்டில் சிக்கிய பிரபல தமிழ் ஹீரோவின் போட்டோ! இது ஆணா? பெண்ணா? குழப்பத்தில் ரசிகர்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ என்று  படத்தில் நடிக்க இருக்கிறார். 

இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் காத்திருக்கிறது. 


மேலும், இப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது சிம்பு ஏர்போர்ட்டில் நிற்கும்  புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. 

குறித்த புகைப்படத்தில் சிம்பு மாஸ் போட்டு இருப்பதுடன் குடும்பி வளர்த்து உள்ளார். அவரின் பின்பக்க போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது ஆணா? அல்லது பெண்ணா? என்ற குழப்பத்தில் கமெண்ட்களை பதிவு செய்து  வருகின்றனர்.

இதேவேளை, இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவான முதல் படம் 'STR 48' என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement