• Dec 03 2024

சற்றுமுன் வெளியான தகவல்; பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஐஷு! பூர்ணிமா சேவ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என ஏற்கனவே எமது இணைய தளத்தில் செய்தி பதிவிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அவருக்கடுத்த குறைவான வாக்குகளை பெற்ற ஐஷு தான்  வெளியேற்றப்பட்டுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பூர்ணிமா சேவ் ஆகிட்டார்.

ஏற்கனவே, ஐஷுவின் பெற்றோர் தங்கள் மகளை வெளியே அனுப்பி விடுங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளதால்,  அவரும் வெளியேற்றப்படலாம் என எண்ணிய நிலையில், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும், இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement