• Mar 15 2026

கிளாப்பர் போர்டுடன் கெத்தா போஸ் கொடுத்த ரவிமோகன்.. புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள நடிகர் ரவி மோகன் தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், தற்போது இயக்குநராகவும் உருவெடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘ஆன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்தப் படத்தின் பூஜை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.


கடந்த ஆண்டு ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டூடியோல்’ (Ravi Mohan Studios) மூலம் புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு இணையாக தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தையே தானே இயக்கும் வகையில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள அவர், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தின் பூஜை விழா நேற்று மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரவி மோகன், யோகி பாபு மற்றும் கெனிஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படக்குழுவினரும், தொழில்துறை நண்பர்களும் கலந்து கொண்டு இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பூஜை விழாவில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக ரவி மோகன் இயக்குநராக கிளாப்பர் போர்டை பிடித்து நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement