• May 25 2026

அஞ்சலி சரவணனை ஒன்றாகப் பார்த்த மயில்... அதிரடியான கதைக்களத்துடன் டுடே எபிசொட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் மயிலைப் பார்த்து மாப்பிள்ளையை பார்த்தியா என்று கேட்கிறார். மேலும், அம்மா கிட்ட சொல்லு மாப்பிள்ளை என்ன சொன்னாரு என்று பாக்கியம் கேட்க, மயில் அதுக்கு நான் அவரை பார்க்கல என்கிறார். அதோட, குழந்தை விஷயத்தையும் சொல்லவே இல்ல என்கிறார். அதனை அடுத்து பாக்கியம் மயிலைப் பார்த்து இதுக்கு தான் நாங்களே மாப்பிள்ளை கிட்ட பேசுறோம் என்று சொன்னோம் என்று சொல்லிப் பேசுறார்.

அதைக் கேட்ட மயில் போதும் நிறுத்துறியா என்று சொல்லிக் கத்துறார். பின் நான் அம்மாவாகப் போற விஷயத்தை என்னோட புருஷன் கிட்டயோ, புகுந்த வீட்டிலயோ சொல்லப்போறது கிடையாது.. தனி ஆளா என்னோட பிள்ளையை வளர்க்கப் போறேன் என்கிறார். அதுக்கும் பாக்கியம் ஊரு என்ன சொல்லும் தெரியுமா? என்று சொல்லிப் பேசுறார்.


அதைத் தொடர்ந்து மயில் பாக்கியத்தை பார்த்து என்னோட விஷயத்தில நீ மறுபடியும் முடிவெடுத்திடாத என்கிறார். பின் மீனா மயிலைப் பார்த்து உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமாவே இல்லயா என்று கேட்கிறார். அதுக்கு மயில் வருத்தமாத் தான் இருக்கு ஆனா, அதைப் பற்றி எல்லாம் இப்ப யோசிக்கப் போறது கிடையாது என்கிறார்.

மேலும், நீ என்கூட இருக்கிறது எவ்வளவு பெரிய வரம், கடைசி வந்தாலும் மறக்கமாட்டேன் என்று சொல்லுறார் மயில். அதனை அடுத்து மீனா கிட்ட பாக்கியம் என்ன நடந்தது என்று கேட்கிறார். அதுக்கு மீனாவும் நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். பின் சரவணன் அஞ்சலி கிட்ட மயில் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை சொல்லுறார். அதைத் தொடர்ந்து, இரவு ரோட்டில நடந்து வரும் போது மயில் சரவணன் அஞ்சலி கூட கதைச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement