• Jan 18 2025

ரவீனாவின் அறுணாகயிறு விவகாரம்; அப்போ நானும் தான் கூட இருந்தன்! உண்மையை உடைத்த யுகி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக justice for pradeep என்ற ஹேஷ் டேக்கே வைரலாகிவருகின்றது. 

பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது இணைய வாசிகளுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பிரதீப் எப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த யுகேந்திரன் தெரிவித்துள்ளார். 

அதன்படி நடிகை ரவீனா தன்னுடைய அறுணாகயிறு பற்றி பிரதீப் பேசினான் என்று சொன்ன குற்றச்சாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி யுகேந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.


இந்த சம்பவம் நடக்கும் போது நானும் அவங்க கூட தான் இருந்தன். அப்ப ரவீனா விளையாடிக் கொண்டிருந்தா. அப்போ தான் அவருடைய அருணாக்கயிறு தெரிந்தது. அந்த நேரத்துல தான் 'இந்த நிகழ்ச்சிய பல பேர் பார்த்துகிட்டு இருக்காங்க. அதனால டிரஸ்ஸ சரியா போடு' என்று பிரதீப் சொன்னான். 

ஆனா, அந்த நேரத்தில அதை ரவீனா பெருசா எடுக்கல. ஆனால் கமல் முன்பு அதை ஒரு பெரிய விஷயமாக சொல்லி இருந்தார் என்று யுகேந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 

Advertisement

Advertisement