• Jan 19 2025

ரசிகர்களின் ஆசையை அவமதித்த சிவகார்த்திகேயன்- என்ன செய்துள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், தற்பொழுது சின்னத்திரையில் முக்கியமான நடிகராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

 அதன் தொடர்ச்சியாக தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிதது வருகின்றார்.சில வாரங்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய SK 21 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இது ஒரு புறம் இருக்க அண்மையில் இசையமைப்பாளரான டி.இமான்  இனிமேல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்கமாட்டேன் என்றார். தனது குடும்ப விவகாரத்தில் அவர் துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால் சிவாவுடன் இனி எந்த தொடர்பும் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால், சிவா இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுக்கவில்லை.பொய்க்கு ஏன் நான் விளக்கம் தரணும்னு" என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்று டிவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேஷ்டி சட்டையுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக வீட்டுக்குள் செல்கிறார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் விரும்பியதாகத் தெரிகிறது.


ஆனால், அவர் வேண்டாம் என சொல்வது போல கையை காட்டிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் செல்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சிவகார்த்திகேயன் ரசிகரை சந்திக்காமல் செல்வது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement

Advertisement