பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது குபேரா, சிக்கந்தர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது ராஷ்மிகாவுக்கு காலில் காயம் அதனால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானத்தில் இருந்து தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா-2 பேன் இந்தியா பேமஸானது. வசூலிலும் விமர்சனத்திலும் பட்டையை கிளப்பியது. இதனை அடுத்து தற்போது குபேரா, சிக்கந்தர் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள் ராஷ்மிகாவை ஓய்வில் இருக்குமாறு கூறியதாகவும் அதனால் சிக்கந்தர்படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துடன் நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் " எனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது புனிதமான ஜிம்மில் காயம் அடைந்தேன். இப்போது நான் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ரெஸ்ட்டில் இருக்க வேண்டும். விரைவில் சிக்கந்தர், மற்றும் குபேரா ஷூட்டிங்கு கிளம்புவேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
Listen News!