• May 12 2025

ரோஜாப்பூவுடன் காத்திருக்கும் ராஷ்மிகா..!ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய இன்ஸ்டாகிளிக்ஸ்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா உலகில் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ராஷ்மிகா. தென்னிந்திய திரையுலகிலும், பாலிவுட்டிலும் திறமையான நடிப்பையும், இயற்கை  அழகையும் கொண்டு ரசிகர்களின் இதயத்தை வென்று வருகின்றார்.


இந்நிலையில், நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில், ராஷ்மிகா தனது வலது கையில் ஒரு சிவப்பு ரோஜாப்பூவை வைத்துக் கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


புகைப்படத்தைப் பார்த்த பலரும், “இந்த ரோஜாப்பூ யாருக்காக இருக்கும்?” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் ராஷ்மிகாவின் அழகை பாராட்டி, “ரோஜாவை விட நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க..!” என்றும் கூறியுள்ளனர். இப்புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலான கொஞ்ச நேரத்திலேயே அதிகளவான கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement