• Dec 26 2024

புஷ்பா 2-வில் செம ஹலைட்ஸ் போட்டோஸை தெறிக்கவிட்ட ராஷ்மிகா.! வேற லெவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் மிகுந்த நம்பிக்கை உடனும் இன்றைய தினம் திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2 திரைப்படம். இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஆயிரம் கோடி வரை வசூலை வாரிக்  குவித்துள்ளது.

தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என்று பான் இந்திய அளவிலேயே புஷ்பா 2 திரைப்படம் இன்றைய தினம் வெளியானது. தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் புஷ்பா 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

d_i_a

2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் கிட்டத்தட்ட அதன் வெற்றியை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் அல்லு அர்ஜுன் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை . இந்த ஒரு படத்திற்காகவே அயராது உழைத்துள்ளார்.


மாஃபியா மன்னான புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜூன்) இதில் களமிறங்க, அதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் பன்வர் சிங் ஷெகாவத் இருவருக்கும் இடையில் நடக்கும் கடுமையான சண்டை காட்சிகளை மையப்படுத்தி தான் புஷ்பா 2 படம் நகர்ந்து உள்ளது. இந்த படம் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை பெற்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்....


 

Advertisement

Advertisement