ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாபி தியோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள அனிமல் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். பயங்கரமான மியுசிக் ஓடு தாறுமாறாக வெளியாகியுள்ளது.
அனிமல் படத்தில் ரன்பீர் மற்றும் பாபியுடன் அனில் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரன்பீர் இன்னும் அவரது இரத்தக்களரி அவதாரத்தில் காணப்படுகிறார் - கத்தி, கோடாரி மற்றும் இயந்திர துப்பாக்கியால் இரக்கமில்லாமல் கொலை செய்கிறார்.
பொதுவாக கதையை சுட்டிக்காட்டினால், ரன்பீரின் கதாபாத்திரம் அவரது வளரும் ஆண்டுகளில் வன்முறை வளர்ப்பின் விளைவாக என்ன ஆனது என்பதை எடுத்துக்காட்டுகிறது.அதன்படி, அனிமல் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம் வாங்க..
அதன்படி, தனது தந்தையின் முழு அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக எந்த எல்லை வரை செல்வான் மகன் என்பதே இதன் கதைக்களம். அதாவது அளவு கடந்த தந்தை பாசம்..அத்துடன் அப்பா மகன் இடையிலான சண்டை, வன்முறைகளை எடுத்துக் காட்டுகிறது.
அவ்வாறான கதா பாத்திரத்தில் சிறப்பான மகனாக ரன்வீர் கபூரும் அவரது தந்தையாக அனில் கபூர் நடித்திருக்கிறார். சிறிய வயதில் இருந்தே இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான தனது தந்தையின் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் ரன்பீர் சிங் கோபமான ஒரு இளைஞனாக வளர்கிறார். தன் தந்தை தன்னை எவ்வளவு காயப்படுத்தினாலும், அவரது உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது அவரது எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் இந்த சிக்கலான உறவு நிலையைஇ ரத்த நெடியை, பார்வையாளர்கள் உணரும் அளவிற்கு ஒரு கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படம் என்று அனிமல் படத்தை சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான எந்த கதையமைப்பும் இந்தப் படத்தில் கிடையாது. பல வருடங்களுக்கு இரு குடும்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த ஒரு மோதலும், அதனால் ஏற்பட்ட பகையும் மட்டுமே இவ்வளவு அதீதமான வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஒரு படத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.
இவ்வாறுஇ தன்னுடைய தந்தையின் மீது காட்டப்படும் அன்பு ஒரு விதத்தில் பைத்தியமாக இருக்கும் ஒருவனின் மனதை படம்பிடித்து காட்டுவதே அனிமல் படத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
Listen News!