• Jan 19 2025

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அனிமல்.இப்படத்தினை இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கியுள்ளார்.மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக உருவாகிய இத்திரைப்படம் நேற்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியிருந்தது.

ரன்பீர் கபூருடன் இப்படத்தில் ரஷ்மிகா இணைந்து நடித்துள்ளார். பான் இந்தியத்திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படம்  ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் கூட மறுபக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


முதல் பாதி சூப்பர், ஆனால் இரண்டாம் பாதி சொதப்பல் என்பது போல் தான் படம் பார்த்த ரசிகர்கள் கருத்து இருக்கிறது.இந்நிலையில், அனிமல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.இனி வரும் நாட்களிலும் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement