• Jan 19 2025

லோகேஷ்,ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 71 படத்தில் வில்லனாகும் மூன்று முக்கிய நடிகர்கள்- அடடே இவங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் என்று கூறப்படுகின்றது.

இதனை அடுத்து லோகேஷ கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த திரைப்படத்தில் வில்லன்களாக நடிக்க மூன்று பேருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


ஏற்கனவே  நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர் அருண் விஜய்யிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement