• Aug 02 2025

வேள்பாரி நூல் விழாவில் ரஜினி பங்கேற்பு...!வைரலாகும் ரஜனியின் பேச்சு...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற வேள்பாரி நூலின் வெற்றி விழா, இலக்கிய உலகிலும் சினிமா உலகிலும் மிகுந்த கவனம் பெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது முக்கிய நிகழ்வாகும்.


100ஆவது நாள் வெற்றியை கொண்டாடும் ஒரு வெள்ளி விழாவை போல, இந்த நூல் விழாவும் பெருமிதத்துடன் நடந்தது. வேள்பாரி புத்தகம் தற்போது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதன் ஆசிரியர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய இந்த கதையை கைப்பற்றியவர் இயக்குநர் சங்கர். இந்த கதையை தற்போது திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் சங்கர், இதனை தனது கனவு திரைப்படம்  என அறிவித்தி உள்ளார்.


விழாவில் பேசிய ரஜினி, "75 வயசுல கண்ணாடிய போட்டுட்டு ஸ்லோ மோஷன்ல நடக்கிறேன், என்னை இவங்கதான் கூப்பிட்டாங்க" என நக்கல் கலந்த நயமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். வேள்பாரியை அவர் வாசித்திருக்கிறார் என்றும், தனது ஓய்வு நேரத்தில் வாசிக்க நினைத்த முக்கிய நூல்களில் இதுவும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் வேள்பாரி திரைப்படத்துக்கு நடிகர்கள் யாரென்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த படம் ஒரு மாபெரும் வரவேற்பு பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாகுபலிக்கு பிறகு இவ்வளவு பேச்சு கிளப்பிய பெரும் புராண அடிப்படையிலான திரைப்படமாக இது அமையும் எனத் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த்  கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement