• Nov 04 2025

திவ்யாவை சரமாரியாக கேள்வியெழுப்பிய திவாகர்... சூடு பிடித்த பிக்பாஸ்.!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த நாட்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கும் போது, 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களின் நடிப்பு, உரையாடல் மற்றும் சண்டைகள் அனைத்தும் பெரிய ஆர்வத்தை உருவாக்கியது. ஆரம்பமாக, நந்தினி சொந்த விருப்பத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் குறைந்தளவு வாக்குகள் மூலம் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர்.


இந்த இடைவெளியில், பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக புதிய போட்டியாளர்களை இணைத்தனர். இதில் திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜின் மற்றும் அமித் ஆகியோர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.

இவர்கள் புதிய சவால்களை உருவாக்கியவுடன், முன்னணி போட்டியாளர்களுடன் பரபரப்பான வாக்குவாதங்களையும் தொடங்கினர். சமீபத்திய ப்ரோமோவில் , திவ்யா மற்றும் வாட்டர் மெலன் திவாகர் இடையே பரபரப்பான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.


அதன்போது, திவாகர் திவ்யாவை “இஸ்டமுனா இருங்க... இல்லன்னா எந்திரிச்சு போங்கன்னு சொல்லுறதுக்கு நீங்க ஒன்னும் பிக் பாஸ் கிடையாது” என்று கூறினார். இந்த கருத்துக்கு திவ்யா, “நான் பிக் பாஸ் கிட்ட கேட்டுட்டு தான் போங்கன்னு சொன்னேன்." என்றார். இவ்வாறாக இரண்டு பேரும் மாறி மாறி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement