• Jun 28 2024

சல்மான் கானுடன் இணைந்து நடிக்கும் ரஜனி காந்த்! மாஸ் காட்டிய அட்லீ !

Nithushan / 3 days ago

Advertisement

Listen News!

சல்மான் கான் ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி  இருந்தாலும்  மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது  மைனே பியார் கியா  என்ற திரைப்படத்தின் மூலமே ஆகும். இந்த நிலையிலேயே இவருடன் ரஜனி காந்த் இணைகிறார்.


ரஜனி காந்த் என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல ஹிட் படங்களை கொடுத்த இவர் சமீபத்தில் வேட்டையன் , கூலி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். 


இந்த நிலையிலேயே ரஜனி காந்த் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண் இந்தியா இயக்குனராக இருக்கும் அட்லீயின் அடுத்த திரைப்படத்திலேயே இவர்கள் இருவரும் நடிக்க உள்ளனர். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement