• Jun 28 2024

புலி முதல் லியோ வரை தளபதி சொன்ன குட்டி கதைகள் என்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ!

Nithushan / 3 days ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் பொதுவாக எந்த மேடையில் ஏறினாலும் குட்டி கதை ஒன்று சொல்வது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறு குட்டி ஸ்டோருக்கு பெயர் போன விஜய் புலி திரைப்படத்தில் இருந்து லியோ திரைப்படம் வரை சொன்ன குட்டி கதைகள் இதோ!


புலி 


ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆணோ பெணோ இருப்பர் என சிலர் சொல்வர். ஆனால் என் வெற்றிக்கு பின் அவமானங்களே உள்ளன. உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸை, அவரின் சிறு வயதில் அவரை அனைவரும் குறைசொல்லி கொண்டே இருப்பார்களாம். அதை கேட்டு தன்னை சரி செய்து கொள்வாராம் அவர். பின்னாளில் அவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். ஆனால் அவரை குறை கூறியவர்கள் அவரின் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்தனர். ஆகவே 'நமக்குதான் எல்லாம் தெரியும்; மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது'' என நினைக்காதீர்கள். மற்றவர்கள்தான் நமக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தவர்கள். மறந்து விடாதீர்கள்


தேறி 


முன்னாள் சீன அதிபர் மாவோ ஒரு முறை ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு சிறுவன் தலைவர்களின் புகைப்படங்களை விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறார். அருகில் சென்று பார்த்த போது. அத்தனையுமே அவரின் புகைப்படங்களாகவே இருந்துள்ளன. கொஞ்சம் கர்வம் இருந்தாலும், அந்த பையனிடம் சென்று தன்மையாக, 'என்னதான் உனக்கு என் மேல பாசம், மரியாதை இருந்தாலும் நீ என்னுடைய புகைப்படங்களை மட்டும் விற்பது தப்பு. மற்ற தலைவர்களின் புகைப்படங்களையும் சேர்த்து விற்க வேண்டும்' என அறிவுரை கூறியுள்ளார். அதற்கு அந்த பையன், "அந்தப் புகைப்படங்கள் எல்லாம் எப்போதோ விற்று தீர்ந்து விட்டன. இவைதான் விற்பனையாகவில்லை" என்றுள்ளான். எனவே நாம் கர்வப்படாமல் வாழ்க்கையில் பல உயரங்களை தொட வேண்டும்!


மெர்சல் 


"இதய மருத்துவ நிபுணர் ஒருவர், தனது காரை மெக்கானிக் ஒருவரிடம் கொண்டு சென்றார். அதை சரிபார்த்த மெக்கானிக், மருத்துவரிடம் 'உங்களை போலவே நானும் வால்வுகளை மாற்றுகிறேன், அடைப்புகளை சரி செய்கிறேன், ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுகிறேன். இப்படி நீங்கள் செய்யும் அனைத்தையும் நானும் செய்கிறேன் ஆனால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை, புகழ், பணம் எதுவும் எனக்கு கிடைப்பதில்லையே... ஏன்?' என கேட்டார். அதற்கு மருத்துவர் மிகவும் தன்மையாக, "இதையெல்லாம் நீங்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கும் போது செய்து பாருங்கள். புரியும்" என்றார். எவ்வளவு பெரிய விஷயத்தை அவர் எவ்வளவு அழகாக எளிதாக தெளிவுபடுத்தியுள்ளார்!


சர்க்கார் 


மன்னர் ஒருவர் தனது பரிவாரத்துடன் வேறு ஒரு ஊருக்கு சென்றார். அப்போது வழியில்

அவர் தனக்கு எலுமிச்சை ஜூஸ் வேண்டும் என கேட்டுள்ளார். • அதை செய்து கொடுக்கிறார்கள். அப்போது மன்னர் அதல் கொஞ்சம் உப்பு கலந்து கொடுக்கவும் என கேட்டுள்ளார். அதற்கு அருகில் இருக்கும் கடையில் இருந்து கொஞ்சம் உப்பு எடுத்து வரவும் என ஒருவர் சொல்லியுள்ளார். அதற்கு மன்னர் 'கொஞ்சமாக இருந்தாலும், உப்பை காசு கொடுத்து வாங்கி வரவும்' என சொல்லி இருக்கிறார். உடனே அருகில் இருந்தவர் 'கொஞ்சம் உப்பில் என்ன ஆகப்போகிறது?' என கேட்டுள்ளார். அதற்கு மன்னர், "நான் இன்று கொஞ்சம் உப்பை காசு கொடுக்காமல் எடுத்துக் கொண்டால், 'மன்னரே காசு கொடுக்கவில்லை நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?' என எனக்கு பின்னால் வரும் பரிவாரம் மொத்த ஊரையும் கொள்ளை அடித்துவிடும்' என சொல்லியுள்ளார். அதுதான் மன்னர்களின் ஆட்சி


மாஸ்டர் 


என்னுடைய 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. • நீ நதி போல ஓடிக் கொண்டிரு...' பாடலில் வரும் வரிகள் போலதான் நமது அனைவரின் வாழ்க்கையும். ஒரு நதி புறப்படும் போது பலரும் அதை விளக்கேற்றி வணங்குவார்கள். சிலர் பூ தூவி வரவேற்பார்கள், பிடிக்காத சிலர் கல் எறிவார்கள். இப்படி யார் எது செய்தாலும் நதி தனது வழியில் போய் கொண்டே இருக்கும். நாமும் நதியை போலவே யார் என்ன செய்தாலும் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போயிட்டே இருக்கணும்


வாரிசு 


1990 காலகட்டத்தில் எனக்கு ஒரு போட்டியாளர் இருந்தார். அவர் என்றுமே விஜய்யை பின் தொடர்ந்து வந்துள்ளார். அவரை எப்படியாவது முந்தி விட வேண்டும் என நானும் வேகமாக ஓடினேன். நம் வாழ்க்கையில் எப்போதுமே ஒரு போட்டியாளர் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஓட வேண்டும் என்ற உத்வேகம் வரும். என்னுடைய அந்த போட்டியாளர். ஜோசப் விஜய். உங்களுக்கும் நீங்கள்தான் போட்டியாளர். உங்களை நீங்கள் வெல்ல எப்போதும் முயலுங்கள்


லியோ 


ஒரு காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில், காக்கா, கழுகு....(அரங்கமே சத்தத்தால் அதிர்ந்தது) இருந்தன. காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் ஒருவர் வில்-அம்பும், இன்னொருவர் ஈட்டியும் எடுத்து சென்றனர். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடினார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். இலக்கை பெரிதாக வைத்து அதை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் 'பெரிதினும் பெரிது கேள்..' பெரிதாக கனவு காணுங்கள். "Small aim is crime" என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்






Advertisement

Advertisement