• Nov 13 2025

ராஜமெளலி – மகேஷ் பாபு மாஸ்டர் காம்போ ரெடி.! பர்ஸ்ட் லுக் தேதியை அறிவித்த படக்குழு.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்டமான திட்டம் ஒன்று தற்போது உச்ச கட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. உலகளவில் வெற்றியைப் பெற்ற இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலி மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணைந்து உருவாக்கும் இந்த மாபெரும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின் படி, ராஜமெளலி – மகேஷ் பாபு இணைந்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பான்-இந்தியா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


“RRR” மற்றும் “பாகுபலி” போன்ற உலகளாவிய வெற்றிகளுக்குப் பிறகு, ராஜமெளலி எதை தொடுவாரோ அது பொன்னாக மாறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியிருந்தது. அவரது அடுத்த படமானது மகேஷ் பாபுவுடன் இணைந்து உருவாகும் என அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் அதனை பிளாக்பஸ்டர் என்று கூறி வருகின்றனர்.


மகேஷ் பாபு இதுவரை தனது கேரியரில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், ராஜமெளலியுடன் இணைவது அவருக்குப் புதிய உயரத்தை அளிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement