பாகுபலி மூலமாக உலக அளவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், தற்போதைக்கு SSMB29 என அழைக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் சுமார் ரூ.1200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், SSMB29, தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும் என்ற சாதனையை படைக்கும். மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் என்றும் உறுதியாகியுள்ளது.
இப்படம் 120 நாடுகளில் ரிலீஸாகும் வகையில், தயாரிப்பு நிறுவனம் சிறப்பான திட்டமிடலுடன் பணியாற்றி வருகிறது. துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பிரமாண்ட படத்தில், பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இசை அமைப்பாளராக ராஜமௌலியின் உறவினர் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம். கீரவாணி பணியாற்றுகிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என ராஜமௌலி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
Listen News!