• May 03 2026

'மைக்கேல்' படத்திற்கு 9 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் குவிந்தது எப்படி?

shali / 59 minutes ago

Advertisement

Listen News!

மைக்கேல் திரைப்படம் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. புகழ்பெற்ற இயக்குநர் ஆண்டோயின் புகுவா இயக்கத்தில் உருவான இந்த படம், இசை உலகின் புராண நாயகன் மைக்கல் ஜாக்சன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.


மேலும், ‘கிளாடியேட்டர்’ படத்தின் மூலம் பிரபலமான ஜான் லோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த 24ஆம் தேதி வெளியான இப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

வசூல் விவரங்களின்படி, ‘மைக்கேல்’ திரைப்படம் வெளியான 9 நாட்களிலேயே உலகளவில் ரூ. 2600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 40 கோடி வசூலை கடந்துள்ளது.

இசை, நடனம் மற்றும் வாழ்க்கை வரலாறு ஆகியவை கலந்த இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement