இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பாராட்டு விழா நேற்று (செப்.13) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது.
1976-ம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,500-க்கும் அதிகமான பாடல்களைத் தந்துள்ளார். சமீபத்தில், லண்டனில் அவரது கனவு இசை உருவாக்கமான 'வேலியண்ட் சிம்பொனி'யை மார்ச் 8-ம் தேதி உலக அரங்கில் அரங்கேற்றி சாதனைப் படைத்தார்.
விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் இசைஞானிக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட வீடியோவில், "இளையராஜா இசைத் துறையில் தமிழர் பெருமையை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர். சிம்பொனி சாதனை ஒவ்வொரு இசை கலைஞருக்கும் ஊக்கமாகும்,” எனக் கூறியுள்ளார்.
இசைஞானியின் 50 ஆண்டு பணி சிறப்பு கொண்டாட்டமாக தமிழக அரசு நடத்திய இந்த விழா, இசை உலகம் முழுவதும் பெருமைபடுக்கும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
Listen News!