• Mar 13 2026

ஹாரர் கதைக்களத்துடன் ரசிகர்களைக் கவரவரும் ரச்சிதா.. வெளியானது “99/66” படத்தின் பர்ஸ்ட்லுக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் ஹாரர், த்ரில்லர் வகை திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில், ரச்சிதா நடிப்பில் உருவாகியுள்ள “99/66” திரைப்படமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. எம்.எஸ்.மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், அதிர்ச்சி, பயம் மற்றும் ஹாரர் அனுபவத்தை ஒரே நேரத்தில் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது. அதன்பின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தில், பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதாவது, சபரி , ரோகித் , ஸ்வேதா ,பவங்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா , குமாரி கனிஷ்கா , ஸ்ரீலேகா மற்றும் பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில், தற்பொழுது வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹாரர் படங்களின் பேக்கிரவுண்டில் அதிர்ச்சி மற்றும் பயத்தை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, படத்தின் மாயமான மற்றும் அமானுஷ்ய சூழலையும் பிரதிபலிக்கிறது.

Advertisement

Advertisement