• Aug 24 2026

அடையாளமே தெரியாமல் மாறிய ரச்சிதா.! இணையத்தை அதிர வைக்கும் புதிய ஸ்டீல்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி, தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல வெற்றிகரமான சீரியல்களின் மூலம் புகழ்பெற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது கேரியரில் புதிய பாதையைத் தேர்வு செய்துள்ளார்.


சீரியல்களில் இருந்து சற்று விலகி, தற்போது திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ரச்சிதா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.


பிளாக் அண்ட் வைட் கலந்த கலைநயமிக்க தோற்றத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. எளிமையான மேக்கப் மற்றும் ஸ்டைலான போஸ் ஆகியவை அவரது அழகை மேலும் மெருகேற்றியுள்ளன. 


இந்த புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளும், ஏராளமான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன. 

Advertisement

Advertisement