தமிழ் சினிமாவில் ஹாரர்-காமெடி வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றாக திகழ்கிறது காஞ்சனா. ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த இந்த படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பயமும் நகைச்சுவையும் கலந்த இந்த படம், அக்காலத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கியதோடு, பின்னர் தொடர்ச்சிப் படங்களுக்கும் வழிவகுத்தது.

இப்படம் வெளியாகி சுமார் 15 ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மறுவெளியீடு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 13ஆம் தேதி எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்ட இந்த படம், எதிர்பாராத அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்த மறுவெளியீடு முதல் நாளிலேயே வசூலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. தயாரிப்பு தரப்பின் தகவலின்படி, தெலுங்கு பதிப்பில் மட்டும் முதல் நாளில் சுமார் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் இப்படியான வசூல் கிடைத்திருப்பது, “காஞ்சனா” படத்தின் நிலையான ரசிகர் ஆதரவை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்த ராய் லட்சுமி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். அவர், “காஞ்சனா” படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது கவர்ச்சியையும், அதே எர்னர்ஜியையும் வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோ, “காஞ்சனா” படத்தின் மறுவெளியீட்டுக்கு மேலும் பப்ளிசிட்டி சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!