• Jun 28 2024

எம்.எஸ் பாஸ்கருக்கு கொடுத்த தரமான பதிலடி! புளு சட்டை மாறனின் X தள பதிவு !

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திரைப்பட துறையினருக்கும் திரைப்படங்களை விமர்சிக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை என்பது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையிலேயே புளு சட்டை மாறனுக்கு ms பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனை தொடங்கியுள்ளது.


ms பாஸ்கர் சமீபத்தில் " 120 ரூபாய் வைத்து கோபுரம் கட்டப்போவது இல்லை. படம் பிடித்தது என்றால் 4 பேருக்கு சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு போகிறவர்களிடம் "அந்த படத்திற்கு போகாதீங்க .. நல்லாவே இல்லை" என்று சொல்லாதீர்கள். ஒரு படத்தை எடுப்பதற்கு எத்தனைப் பேர் உழைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள்." என குறிப்பிட்டிருந்தார்.


இதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புளு சட்டை மாறன் தனது X தல பக்கத்தில் "படம் பிடிக்கவில்லையென்றால் அதை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள் எனக்கூறிய எம்.எஸ்.பாஸ்கருக்கு சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு!உழைத்த பணத்தில் படம் பார்க்கிறோம்.  120 ரூபாய் சும்மா வரவில்லை. ஹோட்டலில் சாப்பாடு சரியில்லையென்றால் அதை தட்டிக்கேட்காமல் அமைதியாக இருப்பீர்களா?' என பலரும் கேள்வி. கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நசுக்கப்படுவதாக அனைவரும் கருத்து" என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement