• Jun 30 2024

கண்ணீர் விட்டு கதறியழுத முத்து.. வாயடைத்து நின்ற வீட்டார்! சிறகடிக்க ஆசையில் இன்று..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , முத்து வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து அப்பாவால ரூம் கட்ட முடியலையே என வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்கின்றார். மேலும் தான் சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டதாகவும் பாட்டி வீட்டுலையும் வெளியில் தான் படுத்து தூங்கியதாகவும் இங்கேயும் மொட்டை மாடியில் தான் படுத்து தூங்குவதாகவும் மனக்கவலையை வெளிப்படுத்துகிறார்.

மேலும் மனோஜ் இந்த வீட்ட ஆட்டையை போட போறான்  என்று சொன்னதைப் பற்றி பேசி , நான் இந்த வீட்டில் அப்பா இருக்க மட்டும் தான் இருப்பேன். அப்பா இருக்கிற படியா தான் இது கோவில் என அப்பா மேல் இருக்கிற பாசத்தையும் வெளிகாட்டுகின்றார் .

இதையெல்லாம் கேட்டு அண்ணாமலை கண்கலங்குகிறார். அதற்கு பின் மீனா முத்துவை சாப்பிட வைத்து படுக்க வைக்கின்றார். ஆனால் விஜயா அவன் குடிச்சு போட்டு கதைக்கிறார் என அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கின்றார்.


மறுநாள் காலையில் முத்து சாமியரையில் பூஜை பண்ணுகிறார். எல்லோரும் சத்தம் கேட்டு வெளியே வர அங்கு முத்து பூஜை பண்ணுவதை பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.

இதைத் தொடர்ந்து முத்து அண்ணாமலையிடம் நேற்று ரொம்ப ஓவரா போயிட்டு என்னை மன்னிச்சிரு அப்பா என சொல்லிட்டு, நீ எங்களை படித்து ஆளாக்கினா, இந்த வீட்டையும் கட்டினா ஆனா இப்போ ஒரு ரூம் கட்ட முடியலையே என்று ரொம்ப யோசிக்கிறா, அதை தான் என்னால தாங்க முடியல என்று பேசுகிறார். மேலும் இந்த ரூம் பிரச்சனை இனி வேணாம் என்று சொல்லுகிறார்.

இதன் போது விஜயா, ஸ்ருதி அம்மா காசு தந்தார்களே அத வாங்கி இருந்தா பிரச்சினை வந்து இருக்காது என்று சொல்ல, அந்த காசுல எல்லாம் கட்ட வேண்டாம் என்று சொல்லுகிறார் முத்து.  இதன்போது ஸ்ருதி இடையில் வாயைப் போட ரவி அவரை சமாதானப்படுத்துகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement