• Jun 30 2024

விருது விழாவில் மாணவர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. நியாயமாக கலாய்த்த ப்ளூ சட்டை

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் இன்றைய தினம் கல்வி விருது விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் வழக்கம் போல மாணவர்கள் முன் பேசிய விஜய், லேசான அரசியல், போ. பொருளுக்கு அடிமையாக வேண்டாம்,  சமூக வலைத்தள வதந்திகள் பற்றியும் பேசி இருந்தார்.

இந்த நிலையில், போ. பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என நடிகர் விஜய் பேசிய நிலையில், அதை வைத்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அதாவது இன்றைய தினம் மேடையில் பேசிய விஜய், போ.பொருள் பயன்பாடு அச்சமூட்டுகின்றது. தவறான பழக்கங்கள் வேண்டாம். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ள நிலையில், இதை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் போ. பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்களையும் பார்த்து கெட்டுப் போக வேண்டாம் என விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய், வாத்தியாராக நடித்துள்ளதோடு அதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவும் நடித்திருந்தார். இதை சுட்டிக்காட்டியே ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement