மனுஷங்க யாருக்குமே தெரியாத ஒரு மொழியை எதற்காக நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சத்யராஜ் திராவிட கொள்கைகளில் உடன்பாடு கொண்டவர் என்பதும், தமிழ் மொழி மேல் பற்று கொண்டவர் என்பதும் குறிப்பாக பெரியார் கொள்கையை அவர் கடைபிடித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
அதேபோல் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களில் ஒருவராக சத்யராஜ் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’டாம் குரூஸ் அவர்களுக்கு தமிழ் தெரியாது, அது மாதிரி எனக்கு ஆங்கிலம் தெரியாது, எனக்கு என் தாய்மொழி தெரியும் அவ்வளவுதான்.
தேவை இருந்தால் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் எந்த தேவையும் இல்லாமல் நான் ஏன் ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். குறிப்பாக சமஸ்கிருதம், இந்தி மொழிகள் எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சரி சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு ஆர்வம் வந்தது, அதன் பிறகு தான் தெரிந்தது அந்த மொழி மனுஷங்க யாருக்குமே தெரியாது என்று, அதை கத்துக்கிட்டு நான் யாரிடம் போய் பேசுவது, சரி சிலை கிட்ட போய் பேசலாம் என்று பார்த்தால் அந்த சிலையும் நமக்கு எந்த ரிப்ளையும் தராது’ என்று கிண்டலுடன் பேசி இருக்கிறார்.
சத்யராஜின் இந்த பேச்சுக்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
Listen News!