• Jun 30 2024

இன்று வெளியாகிறது அஜித்தின் "Good Bad Ugly" திரைப்படத்தின் அடுத்த அப்டேட் !

Thisnugan / 2 days ago

Advertisement

Listen News!

AK63 என ஆரம்பிக்கப்பட்ட அஜித்தின் 63வது திரைப்படமானது கடந்த மார்ச் மாதம் "குட் பேட் அக்லி"எனும் தலைப்புடனான பெஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக படத்தின் தலைப்பை அறிவித்தது.வெகு காலமாக அப்டேட்டிற்கு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாடமாகவே அமைந்தது.

Ajith Kumar's next titled Good Bad Ugly ...

ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் இத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் ஆகியோர் தயாரிகின்றனர். மேலும் இப்படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் வழங்க அபிநாதன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் வருகிற பொங்கலுக்கு படத்தை திரையில் எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Good Bad Ugly': Ajith Kumar flaunts tattoos, goes funky in first look  poster - India Today

இந்நிலையில் படம் குறித்து தற்போது வெளியான செய்தி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் அஜித்குமாரின் மானேஜர் சுரேஷ் சந்திர மேனன் தனது எக்ஸ் தள பக்கத்தில் " Today 6.40 , GBU 2" பதிவை இட்டு "குட் பேட் அக்லி" திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இன்று பெரும்பாலும் படத்தின் செக்கண்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளது.


Advertisement

Advertisement