• Jun 30 2024

தமிழகத்தில் வைரலாகும் போஸ்டர்.. பின்னணியில் இந்த சீரியலா? உடைந்த சஸ்பென்ஸ்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, பெண் தேவை என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சினிமா துறையில் ஒரு படத்தை அல்லது ஒரு பிரபலத்தை பிரபலப்படுத்துவதற்கு அல்லது விளம்பரப்படுத்துவதற்காக சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழக்கமான ஒன்று. சில சமயங்களில் சஸ்பென்ஸ் ஆன போஸ்டர்களும் ஒட்டப்படுவது உண்டு. அதேபோல விழிப்புணர்வுக்கான போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்சன் போடப்பட்டு  ஆண், பெண் போட்டோக்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி குறித்த போஸ்டரில் க்யூ. ஆர் கோட்டும் கொடுக்கப்பட்டு இருக்க, அதை ஸ்கேன் செய்து உள் நுழைந்தால் ஸ்கேன் செய்தமைக்கு நன்றி. மாப்பிள்ளையின் பெயர் சிவாஜி, தி பாஸ். வயது 42 எனவும், பெண்ணின் பெயர் மதுமிதா வயது 35 எனவும் மணமகன், மணமகளின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குறித்த போஸ்டர் ஜீ தமிழில் எதிர்வரும் முதலாம் தேதி 7 மணிக்கு புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' என்ற புத்தம் புதிய சீரியலுக்கான பிரமோஷன் போஸ்டர் தான் இது என தெரியவந்துள்ளது.


குறித்த சீரியலில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்கின்றார். 45 வயதாகும் அவர், உணவுப் பிரியர் என்பதால் உடல் எடை கூடி பெண் கிடைக்காமல் போகின்றது.

அதேபோல மதுமிதா என்ற கேரக்டரில் 35 வயதான பெண்ணாக ரேஷ்மா நடித்துள்ளார். இவர்களுக்குத்தான் மணப்பெண், மணமகன் தேவை.... வாங்க சேர்ந்து தேடலாம்.. என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement