• Jun 30 2024

தமிழ்நாட்டில் ஒரு பேனர் கூட இல்லை.. கல்கி 28 98 ஏடி படத்திற்கு மவுசு குறைய காரணம் இது தான்?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்கி 28 98 ஏடி திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி முதல் காட்சியிலேயே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் தமிழ் நாட்டை விட வெளிநாட்டு ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இது தொ வலைத்தள பக்கத்தில் வைரலாகி உள்ளன. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் கல்கி படத்தின் செலிப்ரேஷன் ஆக காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு பக்கத்தில் மாத்திரம் கல்கி 28 98 ஏடி படத்தின் கொண்டாட்டம் வெறிச்சோடி போய் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாக இருக்கின்றது. அதிலும் தியேட்டர்களில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் இருக்கின்றதாம்.

மேலும் பிரபல திரையரங்குகளில் கூட ஒரு பேனர் கூட இல்லையாம். அதற்கு காரணம் பிரபாஸுடன் அமிதாப்பச்சன், கமலஹாசன் என்ற இரண்டு பெரிய லேஜன்ட் நடிகர்கள் நடித்துள்ளது தானாம்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுவதற்கு காரணம் கமல் தான். அதிலும் இந்த படத்தில் கமலஹாசன் வில்லன் எனத் தெரிந்ததுமே பலருக்கு இது புதுசா இருக்கு என தோன்றியுள்ளது. படத்தின் டிரைலரை ரசிகர்கள் பார்த்து உள்ளார்கள். அதுபோல கமலின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. வேற்றுக்கிரகவாசி போல அந்த கெட்டப் இருப்பதாக பார்த்த ரசிகர்கள் சொல்லியுள்ளார்கள்.


எனினும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு மவுசு குறைந்ததற்கு காரணம் பிரமோஷன் தானாம்.. அதாவது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் மும்பை, ஆந்திரா என வேறு இடங்களில் படத்தை சுற்றி சுற்றி விளம்பரம் செய்துள்ளார்கள் படக்குழுவினர். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

கல்கி பட குழுவினரின் மொத்த கவனமும் சர்வதேச அளவில் தான் இருந்தது. முதல் பாகத்தில் கமல் இரண்டு காட்சிகள் மட்டும்தான் வருகின்றார். அதுதான் இரண்டாவது பாகத்திற்கு லீட்டாக அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் கமலின் மிரட்டல் காட்சிகளுக்கு சந்தேகம் இல்லை.

ஆனாலும் தமிழ்நாட்டில் கல்கி படத்திற்கு ஆரவாரம் குறைந்ததற்கு ஒரே ஒரு காரணம் பிரபாஸின் ஆதிபுருஷ் புராண படம் மண்ணைக் கவியது. 

அதன் காரணமாகவே தியேட்டர்களில் பெரிய அலப்பறைகள்  இல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இந்த படம் மீது பெரிய ஈர்ப்பு இல்லை என்பது தெரிகின்றது. ஆனாலும் இந்த படம் உலக அளவில் பெரிய சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement