• Jun 30 2024

கிராமத்து பின்ணனியில் மீண்டும் ஹீரோவாகிறார் நடிகர் அருள்நிதி.

Thisnugan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த  கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் பேர்போனவர் நடிகர் அருள்நிதி.சிறந்த கதைக்களங்கள் மற்றும் பாத்திரத்தெரிவு இவருக்கான ரசிகர் படையை உருவாக்கி கொடுத்தது எனலாம்.2010 இல் "வம்சம்" படத்தில் அறிமுகமான இவர் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்தும் நடித்து வருகிறார்.

காவியத்தலைவன்' வசந்தபாலனுடன் கைகோர்க்கும் 'டிமாண்டி காலனி' அருள்நிதி |  Arulnidhi's Next Movie - Tamil Filmibeat

இறுதியாக இவர் நடித்திருக்கும் "டெமோண்டே காலனி 2" வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரபல இயக்குனர் மு.முத்தையாவுடன் கைகோர்க்கும் அருள்நிதியின் அடுத்த படம் கிராமத்து கதையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலுக்கு 40 கோடி கடன்தான் இருக்கிறது 'மருது' இயக்குநர் முத்தையா |  Director muthaiya says about actor vishal - Vikatan

கடந்தாண்டு அருள்நிதியின் நடிப்பில் வெளியான "கழுவெத்தி மூர்க்கன்" திரைப்படமானது கிராமத்து கதைக்கு அருள்நிதியின் பொருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தது.இயக்குனர் முத்தையா கிராமத்து ஆக்ஷன் படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் என்பதும் நாமறிந்ததே.இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இக் கூட்டணிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

Advertisement

Advertisement