• Sep 20 2024

விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியையும் விட்டு வைக்காத கமல்-விக்ரம் படத்திற்கு வேற லெவலில் ப்ரமோஷன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் . இந்தத் திரைப்படம் நாளை மறுதினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே தான் இருக்கிறது.

மேலும் படத்தின் ப்ரோமோஷன்களை கமல் வேற லெவலில் செய்து வருகிறார், அதன்படி நேற்று ஹைதராபாத் சென்றிருந்த கமல் இன்று துபாயில் படத்தின் ப்ரமோஷன் செய்ய இருக்கிறார்.

அதுமட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கமல் தொடர்ந்து பங்கு பெறுவதை பார்த்து வருகிறோம். விக்ரம் ஸ்பெஷல், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கமல் கலந்து கொண்டுள்ளார்.

அந்த ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது, அதை கண்ட ரசிகர்கள் விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியையும் கமல் விட்டுவைக்கவில்லை என கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement