• Apr 20 2024

உலகம் முழுவதும் டான் திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?-செம குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே அதிக அளவான வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் டான். இந்தப் படத்தினை அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.

அனிரூத் இசையில் வெளியான இப்படத்தினை லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. 12 நாட்களிலேயே படம் ரூ. 100 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இதனால் படக்குழு செம ஹேப்பி.தமிழகத்தில் கூட படம் ரூ. 80 கோடி வரை வசூலை தொட்டுவிட்டது, விரைவில் ரூ. 100 கோடியை நெருங்குமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் படம் நேற்றைய வசூல் வரை உலகம் முழுவதும் ரூ. 114 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மட்டுமல்லாது ரசிகர்களும் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement